ADDED : ஆக 21, 2026 04:01 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் ஏழைகள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏழைகள் முன்னேற்ற கழக நிறுவனர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். காமராஜ், தமிழ்வாணன், சிவகுரு முன்னிலை வகித்தனர். புகழேந்தி, வட்டார காங்., துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட காங்., சிறுபான்மை பிரிவு தலைவர் வெஸ்லி நல்லரத்தினம், வீரவேல், ரங்கராஜன், பாலு, ராமச்சந்திரன் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தமிழக அரசு சமூக நீதித்துறை என்பதை மாற்றம் செய்து, ஆதிதிராவிடர் நலத்துறை என்றே தொடர்ந்து இயங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
