/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல் விதைப்பு தொழில்நுட்ப பயிற்சி
/
நெல் விதைப்பு தொழில்நுட்ப பயிற்சி
ADDED : அக் 25, 2024 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: பரங்கிப்பேட்டை அடுத்த தில்லைவிடாகன் கிராமத்தில், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், நேரடி நெல் விதைப்பில் உயர்தர தொழில்நுட்ப வெளி வளாக பயிற்சி நடந்தது.
பயிற்சியை, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் துவக்கி வைத்தார். மரபியல் துறை பாரதிகுமார், நெல்லில் உயரதர விளைச்சல் தரும் ரகங்கள் குறித்தும், நெல் பயிர் மேலாண்மை குறித்து விளக்கினார்.
பரங்கிப்பேட்டை உதவி வேளாண் இயக்குனர் நந்தினி,வேளாண் துறை மூலம் கொடுக்கப்பட்ட திட்டங்கள், திரவ உரங்கள் குறித்து விளக்கினார்.

