ADDED : நவ 12, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம: நெல்லிக்குப்பம் அண்ணா நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் சதீஷ்குமார், 23; பெயிண்டர்.
இவர், நேற்று முன்தினம் கடலுாரில் நடந்த தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, இரவு பைக்கில் வீடு திரும்பினார். கோண்டூர் அருகே வந்தபோது, கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த டாடா ஏஸ் வாகனம் மோதியது. பலத்த காயமடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

