ADDED : மே 27, 2025 11:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் மாவட்ட மைய நுாலகம் மற்றும் நுாலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய கோடைக்கால ஓவிய பயிற்சி நிறைவு விழா நடந்தது.
நுாலகர் ஆனந்த கணேசன் தலைமை தாங்கினார்.
ஓவிய ஆசிரியர் மனோகரன், கலைச்செல்வி ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி அளித்தனர். நுாலக வாசகர் வட்ட தலைவர் பாஸ்கரன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். விழாவில் நுாலக பணியாளர்கள் சண்முகசுந்தரம், இந்திராகாந்தி, குமுதல், ஆறுமுகம், கண்ணப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

