/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏழை மாணவர்களை டாக்டராக்கியது அ.தி.மு.க., நெய்வேலியில் பழனிசாமி பெருமிதம்

ADDED : ஜூலை 16, 2025 01:18 AM

நெய்வேலி :அ.தி.மு.க., ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதால், ஏழை மாணவ, மாணவிகள் டாக்டர்களாகி உள்ளனர் என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.
நெய்வேலி அடுத்த முத்தாண்டிக்குப்பத்தில் நேற்று முன்தினம் நடந்த பிரசார கூட்டத்தில், அவர் பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவ, மாணவிகள் எளிதில் டாக்டராக வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி, அரசே கல்விக்கட்டணமும் செலுத்தி அவர்களை டாக்டர்களாக ஆக்கினோம்.
குறிப்பாக நடப்பாண்டில் மருத்துவ படிப்பை முடித்து 2818 மாணவர்கள் டாக்டர்களாக அவர்களது வாழ்வில் ஏற்றம் கண்டுள்ளனர்.
விவசாயிகளின் பிள்ளைகளுக்கு மருத்துவக்கல்வி இலவசமாக கொடுத்து உள்ளோம்.
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைய 2026 சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணிக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் பட்சத்தில் அவர்களது சின்னங்களில் ஓட்டளித்து அ.தி.மு.க., கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார். முன்னதாக முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.