/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'பல்லவன் சூப்பர் பாஸ்ட்' ரயிலுக்கு பெண்ணாடத்தில் வரவேற்பு
/
'பல்லவன் சூப்பர் பாஸ்ட்' ரயிலுக்கு பெண்ணாடத்தில் வரவேற்பு
'பல்லவன் சூப்பர் பாஸ்ட்' ரயிலுக்கு பெண்ணாடத்தில் வரவேற்பு
'பல்லவன் சூப்பர் பாஸ்ட்' ரயிலுக்கு பெண்ணாடத்தில் வரவேற்பு
ADDED : மே 15, 2025 11:43 PM

பெண்ணாடம்: விழுப்புரம் - திருச்சி ரயில் மார்க்கத்தில், பெண்ணாடம் ரயில் நிலையம் வழியாக விழுப்புரம் -மதுரை; திருப்பாதிரிபுலியூர் - திருச்சி பாசஞ்சர் ரயில்களும், சென்னை -குருவாயூர்; குருவாயூர் - சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் நின்று செல்கின்றன.
பெண்ணாடம் ரயில் நிலையத்தில் ராக்போர்ட், பல்லவன், வைகை மற்றும் வாராந்திர ரயில்களான அனந்தபுரி, கன்னியாகுமரி, கவுரா, நிஜாமுதீன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, எம்.பி., விஷ்ணுபிரசாத் மத்திய ரயில்வே அமைச்சரிடம் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் 'பல்லவன் சூப்பர் பாஸ்ட்' எக்ஸ்பிரஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
பல கட்ட ஆய்வுக்கு பின், நேற்று காலை 8:37 மணிக்கு பெண்ணாடம் ரயில் நிலையத்திற்கு வந்த 'பல்லவன் சூப்பர் பாஸ்ட்' எக்ஸ்பிரஸ் ரயிலை வரவேற்று பெண்ணாடம் லயன்ஸ் கிளப், ரோட்டரி சங்கம், வணிகர் சங்கம், காங்., - மா.கம்யூ., பா.ஜ., மற்றும் பொது மக்கள் வரவேற்று லோகோ பைலட், டி.டி.ஆர்., ஸ்டேஷன் மாஸ்டர், பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர். பின், 7 நிமிடம் கழித்து ரயில் புறப்பட்டது.