/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் பனை விதை நடும் பணி
/
வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் பனை விதை நடும் பணி
ADDED : அக் 24, 2024 06:40 AM

திட்டக்குடி: வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் அமைச்சர் கணேசன் பனை விதை நடும் பணியை துவக்கி வைத்தார்.
திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக உபரிநீர் செல்லும் வாய்க்காலில் புலிவலம், சிறுமுளை, பெருமுளை, நாவலூர் கிராமங்களையொட்டிய கரைகளில் வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பிற துறைகள் சார்பில், 1 கோடி பனை விதைகள் நடும் விழா 2024 - 25 திட்டத்தில் பனை விதைகள் நடும் பணியை தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது, கூடுதல் கலெக்டர் சரண்யா, ஆர்.டி.ஓ., சையத் மஹ்மூத், தாசில்தார் அந்தோணிராஜ், திட்டக்குடி நகராட்சி துணை சேர்மன் பரமகுரு, மாவட்ட வன அலுவலர், விருத்தாசலம் வனச்சரக அலுவலர், ஊரக வளர்ச்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.