ADDED : டிச 04, 2024 09:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : பெஞ்சல் புயல் பாதிப்புக்கு, சாத்துக்கூடல் கீழ்பாதி ஊராட்சி் தலைவர் நிவாரண நிதி வழங்கினார்.
கடலுார் மாவட்டத்தில் பெஞ்சல் புயலுக்கு கனமழையால் பலர் வீடுகளை இழந்தும், விவசாயிகள் பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, விருத்தாசலம் ஒன்றியம், சாத்துக்கூடல் கீழ்பாதி ஊராட்சித் தலைவர் சக்திவேல், தனது பங்களிப்பாக 10 ஆயிரம் ரொக்கத்தை நிவாரண நிதியாக வழங்கினார். பி.டி.ஓ., மோகனாம்பாள், துணை பி.டி.ஓ., மணிகண்டன், ஒன்றிய பொறியாளர்கள் ருக்மணி, கார்த்திக் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
அப்போது, பி.டி.ஓ., மோகனாம்பாள் தனது பங்களிப்பாக 2 ஆயிரம் நிதி வழங்கினார்.