/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திட்டக்குடி கோவிலில் பங்குனி தேர் திருவிழா
/
திட்டக்குடி கோவிலில் பங்குனி தேர் திருவிழா
ADDED : ஏப் 11, 2025 06:10 AM

திட்டக்குடி: திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் பங்குனி உத்திர தேர்த் திருவிழா நடந்தது.
கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா, சிறப்பு பூஜை நடந்தது.
முக்கிய நிகழ்வான நேற்று காலை 8:00 மணியளவில் தேர் திருவிழாவையொட்டி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், சோமாஸ்கந்தர் மற்றும் அசனாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
விநாயகர், வைத்தியநாத சுவாமி, அசனாம்பிகை அம்மன் அலங்கரிக்கப்பட்டு, தனித்தனி தேர்களில் எழுந்தருளச் செய்து பக்தர்கள் வடம்பிடித்தனர்.
இன்று காலை 9:00 மணியளவில் தீர்த்தவாரி, நாளை 12ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நிறைவடைகிறது.