ADDED : மார் 15, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பங்குனி உத்திர காவடி பெருவிழாவை முன்னிட்டு, பெண்ணாடம் சேனைத்தலைவர் சிவசுப்ரமணியர் மடாலய கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 5:30 மணியளவில் வள்ளி, தேவசேனா சமேத சேனைத்தலைவர் சிவசுப்ரமணியர் சுவாமிக்கு அபிேஷகம், காலை 6:00 மணியளவில் கணபதி ேஹாமம்; காலை 10:20 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
வரும் 23ம்தேதி பால்குட ஊர்வலம், 4:00 மணியளவில் மகா அபிேஷகம், முக்கிய நிகழ்வான 24ம்தேதி காவடி பெருவிழா உற்சவம், 25ம் தேதி திருக்கல்யாணம், இரவு 9:15 மணியளவில் ஊஞ்சல் உற்சவம்; 26ம்தேதி இரவு 7:30 மணியளவில் இடும்பன் பூஜையுடன் பங்குனி உத்திர காவடி பெருவிழா நடக்கிறது.

