ADDED : ஏப் 11, 2025 11:24 PM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோவில்களில் காவடி ஊர்வலம் நடந்தது.
கடலுார்
வில்வராயநத்தம் சுப்ரமணியசுவாமி கோவில் பங்குனி உத்திரத்தையொட்டி 108 காவடிகள் பெண்ணை நதிக்கு எடுத்துச்செல்லப்பட்டு மகா அபிஷேகம் நடந்தது. பின் காவடி ஊர்வலம் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. நேற்று, தேர் திருவிழாவையொட்டி, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இதேப் போன்று கூத்தப்பாக்கம் பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் காவடிகளை சுமந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சி.என்.பாளையம்
மலையாண்டவர் (எ) ராஜராஜேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு கெடிலம் ஆற்றிலிருந்து 108 காவடிகள் சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பின், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலிருந்து 504 பெண்கள் பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்தனர். 10:30 மணிக்கு மலையாண்டவர் கோவிலில் உள்ள தண்டாயுதபாணிக்கு பால்குட அபிஷேகம் நடந்தது.
புவனகிரி
அம்பாள்புரம் செல்லியம்மன் கோவிலில் பறக்கும் காவடி, அலகு போடுதல் மற்றும் 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது. பின் தேரோட்டம் நடந்தது.
சேத்தியாத்தோப்பு
விளக்கப்பாடி செல்லியம்மன் கோவிலில் சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், இளநீரால் சிறப்பு அபிேஷகம் நடந்தது.