
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் பாலமுருகன் கோயிலில் நடந்த பங்குனி உத்திர விழாவில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பங்குனி உத்திரத்தையொட்டி மந்தாரக்குப்பம் பாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், சிறப்பு பூஜைகள், அலங்காரம், மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தன. நேற்று காலையில் ஏராளமான பக்தர்கள், பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் அலகு குத்தி, பால் காவடி, பறவை காவடி, பால்குடங்கள் சுமந்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.