/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி காய்கறி மார்க்கெட்: காலி செய்ய கோர்ட் தடை
/
பண்ருட்டி காய்கறி மார்க்கெட்: காலி செய்ய கோர்ட் தடை
பண்ருட்டி காய்கறி மார்க்கெட்: காலி செய்ய கோர்ட் தடை
பண்ருட்டி காய்கறி மார்க்கெட்: காலி செய்ய கோர்ட் தடை
ADDED : ஆக 13, 2025 04:02 AM
பண்ருட்டி : பண்ருட்டி காய்கறி மார்க்கெட்டை காலி செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
பண்ருட்டி நகராட்சி காய்கறி மார்க்கெட் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இங்கு காய்கறி மற்றும் மளிகை கடைகள் 120 உள்ளன.நகராட்சி நிர்வாகம் மார்க்கெட்டை இடித்து அகற்றி விட்டு நகர்புற கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5.82 கோடி ரூபாய் மதிப்பில் நவீன முறையில் புதிய மார்க்கெட் கட்ட முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக கடைகளை காலி செய்ய வியாபாரிகளுக்கு நேற்று வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடைகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, கடைகளை காலி செய்ய வரும் 9ம் தேதி வரை தடை உத்திரவு வழங்கினார். இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனால் கடைகள் அகற்றும் பணி நடக்கவில்லை.