/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி கெடிலம் ஆற்று பள்ளங்களில் குப்பைகளை கொட்டி நிரப்பும் அவலம் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்

ADDED : ஜன 08, 2024 05:55 AM

பண்ருட்டி: பண்ருட்டி கெடிலம் ஆற்றங்கரையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் குப்பைகள் கொட்டி நிரப்பும் பணியால் நிலத்தடி நீர் மாசு அடையும் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பண்ருட்டி கெடிலம் ஆற்றங்கரையில் நகராட்சி சார்பில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. இது குறித்து நகர மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் குப்பைகள் கொட்டுவதற்கு இடம் இல்லை என கூறி கெடிலம் ஆற்றங்கரையில் கொட்டி வருகின்றனர்.
இந்நிலையில் வரும் 19ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆற்றுத்திருவிழா நடக்கிறது. விழாவில் 50க்கும்மேற்பட்ட கிராமங்களில் இருந்து உற்சவர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக வந்து தீர்த்தவாரியில் கலந்து கொண்டு அருள்பாலிக்கின்றனர்.
இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள்.
இதனையொட்டி நகராட்சி சார்பில் முன்னேற்பாடாக ஆற்றில் கொட்டப்பட்ட குப்பை, கழிவுகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. ஆற்று பள்ளத்தில் தேங்கியுள்ள நீரில் குப்பைகழிவுகளை கொட்டி மூடும் பணி நடந்து வருகிறது. குப்பை கழிவுகளை ஆற்றில் கொட்டி மூடுவதால் ஆற்று மண் மாசு ஏற்பட்டு நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.