/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி ஒன்றிய அலுவலகம் முதல்வர் காணொலியில் திறப்பு
/
பண்ருட்டி ஒன்றிய அலுவலகம் முதல்வர் காணொலியில் திறப்பு
பண்ருட்டி ஒன்றிய அலுவலகம் முதல்வர் காணொலியில் திறப்பு
பண்ருட்டி ஒன்றிய அலுவலகம் முதல்வர் காணொலியில் திறப்பு
ADDED : நவ 12, 2024 08:16 PM

பண்ருட்டி; பண்ருட்டியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தை, காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம், ரூ. 3.63 கோடியில் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, காணொலி மூலம், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பண்ருட்டியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், ஒன்றிய குழு துணைத் தலைவர் தேவகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தேவராஜன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் செல்வி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் ஷபானா அஞ்சும், பி.டி.ஒ.க்கள் சங்கர், சக்தி, பொறியாளர்கள் ஜெய்சங்கர், மாவட்ட கவுன்சிலர் ஜெகன்நாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் தமிழ்செல்வி, சுபாஷினி, விஜயதேவி, அருள்முருகன், உதயகுமார், ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், குணசேகரன், நகர செயலாளர்கள் குருநாதன், மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.