/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
/
துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
ADDED : மார் 14, 2024 05:02 AM

கடலுார், : லோக்சபா தேர்தலை முன்னிட்டு, கடலுாரில் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
கடலுார் மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, டில்லியில் இருந்து துணை ராணுவத்தினர் (மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள்) வந்துள்ளனர்.
அவர்கள் நேற்று கடலுாரில் போலீசாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.
எஸ்.பி., ராஜாராம் தலைமையில், திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு, அண்ணா பாலம் அருகே முடிந்தது. மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி கமாண்டர் ராவத் தலைமையில் 60 வீரர்கள் மற்றும் போலீசார் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
லோக் சபா தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி நுாறு சதவீதம் வாக்களிக்கவும், தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், பாதுகாப்பு தொடர்பாக மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டதாகவும், மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்கள் ஈடுபடுவார்கள் என்றும் எஸ்.பி., ராஜாராம் தெரிவித்தார்.

