/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நல வாரியம் அமைத்து தரவேண்டும் துணை ராணுவத்தினர் கோரிக்கை
/
நல வாரியம் அமைத்து தரவேண்டும் துணை ராணுவத்தினர் கோரிக்கை
நல வாரியம் அமைத்து தரவேண்டும் துணை ராணுவத்தினர் கோரிக்கை
நல வாரியம் அமைத்து தரவேண்டும் துணை ராணுவத்தினர் கோரிக்கை
ADDED : டிச 28, 2024 05:29 AM

நெய்வேலி : இந்திய ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுவரும் சலுகைகள்,துணை ராணுவத்தினருக்கும் வழங்கப்பட வேண்டும் என தமிழக முன்னாள் துணை ராணுவ படை வீரர்கள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலுார் மாவட்டம் நெய்வேலியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கமாண்டர் வினோத் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தமிழக முன்னாள் துணை ராணுவப்படை வீரர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் சீனிவாசன் பேசியதாவது.,
துணை பாதுகாப்பு படை வீரர்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் என்ற அந்தஸ்தை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற பிறகு மறு வேலை வாய்ப்புக்கான வசதிகள் செய்து தரப்பட வேண்டும். வாரிசுதாரர்களுக்கு கல்வி இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.. டி.என்.பி.,சி., ரயில்வே போன்ற துறைகளில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். துணை ராணுவ படை வீரர்களுக்கு நல வாரியம் அமைக்கவேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற துணை ராணுவப்படையினர் பலரும் கலந்து கொண்டனர்.

