/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதையில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு
/
விருதையில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு
ADDED : மார் 17, 2024 05:37 AM

விருத்தாசலம்: லோக்சபா தேர்தலையொட்டி, விருத்தாசலம், மங்கலம்பேட்டையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
கடலுார் மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, டில்லியில் இருந்து துணை ராணுவ படை வீரர்கள் வந்துள்ளனர்.
அவர்கள் நேற்று விருத்தாசலத்தில், உட்கோட்ட போலீசாருடன் இணைந்து கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
துணை கமாண்டர் ராவத், இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ் திவேரா மற்றும் துணை ராணுவத்தினர், டி.எஸ்.பி., பிரபாகரன், விருத்தாசலம் டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, அனைத்து மகளிர்இன்ஸ்பெக்டர் கீதா, சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் இந்த கொடி அணி வகுப்பில் பங்கேற்றனர்.
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இருந்து கடைவீதி, பாலக்கரை, ஜங்ஷன் சாலை வழியாக பஸ் நிலையம் அணிவகுப்பு நடந்தது. மங்கலம்பேட்டையில், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து சுமைதாங்கி பஸ் நிறுத்தம் வரை அணிவகுப்பு நடந்தது.
இதில், லோக்சபா தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி 100 சதவீதம் வாக்களிக்கவும், பாதுகாப்பு தொடர்பாக பொது மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தவும், பதட்டமான வாக்கு சாவடிகளில் எவ்வித பிரச்னையும் இன்றி தேர்தலை நடத்தவும், இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

