/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துணை ராணுவ வீரர்கள் சிதம்பரத்தில் அணிவகுப்பு
/
துணை ராணுவ வீரர்கள் சிதம்பரத்தில் அணிவகுப்பு
ADDED : மார் 14, 2024 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: லோக்சபா தேர்தலையொட்டி, சிதம்பரம் வந்துள்ள துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
சிதம்பரம் தொகுதியில், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பதற்றத்தை தவிர்க்கும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிதம்பரத்தில் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
சிதம்பரம் காந்தி சிலை அருகே துவங்கிய அணிவகுப்பு, வேணுகோபால் தெரு, கீழ வீதி, வடக்கு வீதி வழியாக வண்டிகேட் பகுதியை வந்தடைந்தது.
பேரணியில் கடலுார் ஏ.டி.எஸ்.பி., அசோக்குமார், சிதம்பரம் ஏ.எஸ்.பி.,  ரகுபதி, இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் பாபு, கல்பனா, சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

