/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு
/
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு
ADDED : மார் 25, 2025 06:52 AM

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றக்கோரி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுரர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த சாத்தா வட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதியை தனி நபர் ஆக்கிரமித்து கொட்டகை அமைத்திருந்தார்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற, வருவாய்த்துறை சார்பில் கடந்த ஜனவரி மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. ஆக்கிரமிப்பு செய்தவர் கேட்டதன்பேரில் கால அவகாசமும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை போலீசார் முன்னிலையில் பெயரளவிற்கு ஆக்கிரமிப்புகளை தானாகவே அகற்றி, அதன் அருகிலேயே கட்டட இடிபாடுகளை வைத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், பள்ளி வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றமால் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என, பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் சேகர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உடன்பாடு ஏற்படாத நிலையில், பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து விருத்தாசலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பரமசிவம் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் விசாரணை செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.