/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூங்கா சீரமைப்பு பணி; துணை மேயர் ஆய்வு
/
பூங்கா சீரமைப்பு பணி; துணை மேயர் ஆய்வு
ADDED : டிச 04, 2024 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் மாநகராட்சி, நான்காவது வார்டு பகுதியில் வெள்ள பாதிப்பை சரிசெய்யும் பணிகளை, மாநகராட்சி துணை மேயர் தாமரைசெல்வன் ஆய்வு செய்தார்.
கடலுார் மாநகராட்சி நான்காவது வார்டு பகுதியிலுள்ள பூங்காவில் மழை வெள்ள நீர் தேங்கி நின்றது. மாநகராட்சி கவுன்சிலர் சரிதா, வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டார்.
அதன்பேரில் என்.எல்.சி., அதிகாரிகள் சந்திரசேகர், அய்யனார், மணிகண்டன் ஆகியோர் தண்ணீரை வெளியேற்றும் வாகனத்துடன் வந்து, நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
துணைமேயர் தாமரைசெல்வன், பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார்.