ADDED : ஜன 07, 2024 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார், திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் உள்ள ஜெயின் கோவிலில் பார்சுவநாதர் அவதார தின விழா நடந்தது. இதனை முன் னிட்டு பார்சுவநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, கோவில் எதிரில் இருந்து அலங்கரிக்கப்பட்ட புதிய தேரில் பார்சுவநாதர் எழுந்தருளச் செய்து வீதியுலா நடந்தது.
தேரடித் தெரு, சுப்புராய செட்டித் தெரு வழியாக தேர் சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஜெயின் சங்கத் தலைவர் புக்குராஜ்குலேச்சா தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஏற்பாடுகளை ஜெயின் சங்க செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். ஏராளமான ஜெயின் சமூகத்தினர் தரிசனம் செய்தனர்.