ADDED : ஜூன் 20, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: சிறுமுளை காலனியில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திட்டக்குடி அடுத்த சிறுமுளை காலனி பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு பல ஆண்டுகளாக, அங்கு ரேஷன் கடை இல்லை. இதனால் ஒன்றரை கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள கூட்டுறவு அலுவலகம் அருகே உள்ள கடையில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய ரேஷன் பொருட்களை வாங்கி பயனடைகின்றனர். துாரம் அதிகமாக உள்ளதால் வாங்கிய பொருட்களை, சுமந்து கொண்டு வீட்டிற்கு செல்ல முதியவர்கள், பெண்கள் சிரமம் அடைகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சிறுமுளை காலனியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.