/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பகுதி நேர ஆசிரியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
பகுதி நேர ஆசிரியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 24, 2024 06:27 AM

கடலுார்: கடலுாரில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், பணி நிரந்தரம் செய்யக் கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் மாவட்ட தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில், அரசு பள்ளிகளில் 13 ஆண்டுகளாக பகுதி நேர சிறப்பாசிரியர்களாக வேலை செய்யும் 13,500 பேரை நிரந்தரம் செய்ய வேண்டும்.
அரசு தேர்தல் வாக்குறுதியாக அளித்த 181வது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ் வரவேற்றார். மாநில நிர்வாகிகள் ஜேசுதாஸ், கீதா, கவுரவ விரிவுரையாளர் சங்க அசோக்குமார், புவனசுந்தர் கண்டன உரையாற்றினர்.
மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ், விஜயக்குமார், கோபாலகிருஷ்ணன், பிரதீப்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

