/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மொபைலில் பேசியபடி அரசு பஸ்சை இயக்கிய டிரைவரால் பயணிகள் அச்சம்
/
மொபைலில் பேசியபடி அரசு பஸ்சை இயக்கிய டிரைவரால் பயணிகள் அச்சம்
மொபைலில் பேசியபடி அரசு பஸ்சை இயக்கிய டிரைவரால் பயணிகள் அச்சம்
மொபைலில் பேசியபடி அரசு பஸ்சை இயக்கிய டிரைவரால் பயணிகள் அச்சம்
ADDED : செப் 21, 2024 06:43 AM

குள்ளஞ்சாவடி: மொபைலில் பேசியபடி அரசு பஸ்சை ஓட்டிய டிரைவரால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணம் செய்தனர்.
கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து, குள்ளஞ்சாவடி, சத்திரம் வழியாக வேகாக்கொல்லை பகுதிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை டிரைவர் ஒருவர் வலது கையால் மொபைல் போனில் பேசிக் கொண்டே, இடது கையால் ஸ்டியரிங் மற்றும், கியரை மாற்றி நேற்று இயக்கினார். (கியரை மாற்றும் போது டிரைவர் ஸ்டியரிங்கை பிடிக்காமல் கியரை மாற்றினார்) அரசு பஸ் டிரைவரின் இந்த செயல் பஸ்சில் பயணித்தவர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
மேலும், அரசு பஸ் டிரைவரின் அலட்சிய செயல்பாட்டை பஸ்சில் இருந்த பயணி ஒருவர், தனது மொபைலில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. விபத்து ஏற்படுத்தும் விதத்தில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.