தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலுார் பஸ் ஸ்டாண்டில் குவிந்த பயணிகள்

கடலுார் பஸ் ஸ்டாண்டில் குவிந்த பயணிகள்

கடலுார் பஸ் ஸ்டாண்டில் குவிந்த பயணிகள்


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 06:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: மாவட்டத்தில் தொடர் விடுமுறை முடிந்து வெளியூர் செல்லும் பயணிகளால் அந்தந்த பகுதி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டன.

காலாண்டு விடுமுறைக்காக மாணவ, மாணவிகள் வெளியூர் சென்றனர். காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது.

காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறைக்காக வெளியூர்களி்ல், தங்கி வேலை செய்யும் அரசு ஊழியர்கள், கல்லுாரி மாணவ, மாணவிகள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

இப்படி தொடர் விடுமுறை முடிந்து வெளியூர் செல்லும் அலுவலக ஊழியர்கள், மாணவ, மாணவிகளால் பஸ்களில் வழக்கத்தை விட அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்படும்.

இதனை தவிர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

அந்த வகையில், கடலுார் மாவட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் கடலுார், பண்ருட்டி, விருத்தாசலம், வடலுார், சிதம்பரம், திட்டக்குடி, நெய்வேலி, காட்டுமன்னார்கோவில் என, 11 பணிமனைகள் உள்ளன.

மாவட்டம் முழுவதும் அந்தந்த பணிமனைகளில் இருந்து சென்னை, சேலம், திருச்சி, கோயம்புத்துார், மதுரை, பெங்களூரு, ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு கூடுதலாக 80 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறினார். இருப்பினும் கடலுார் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் காணப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us