UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 06:14 PM

அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு நகர பகுதிகளில் சிங்கப்பெண் படை போலீஸார் சார்பில் பெண்கள் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சிங்க பெண்படை சப்-இன்ஸ்பெக்டர் உத்தராம்பாள், வேம்புதேவி, ஹேமலதா ஆகியோர் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு நான்கு முனை சந்திப்பு பேருந்து நிறுத்த பகுதி,சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்த பகுதி,புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பஸ்சிற்கு காத்திருக்கும் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
