/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் பஸ் ஸ்டாண்டில் குவிந்த பயணிகள்
/
கடலுார் பஸ் ஸ்டாண்டில் குவிந்த பயணிகள்
ADDED : ஜன 19, 2026 05:04 AM

கடலுார்: பொங்கல் விடுமுறை முடிந்து வெளியூர் செல்ல கடலுார் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த, 15ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிப்பவர்கள், அலுவலக ஊழியர்கள், தொழிலாளர்கள், கல்லுாரி மாணவ, மாணவிகள் சொந்த ஊர் திரும்பினர். குறிப்பாக, சென்னையில் இருந்து ஏராளமானோர் பஸ் மற்றும் ரயில்கள் மூலம் சொந்த ஊர் திரும்பினர்.
பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில் அலுவலக ஊழியர்கள், கல்லுாரி மாணவிகள் நேற்று சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல கடலுார் பஸ் ஸ்டாண்டில் காலை முதல் திரண்டனர். பயணிகள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை தவிர்த்து கூடுதலாக, 70க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.
சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும் பஸ்களில் பயணிகள் முண்டியடித்து ஏறினர். சிலர் தனியார் பஸ்சில் ஏறி புதுச்சேரி சென்று, அங்கிருந்து சென்னைக்கு சென்றனர்.

