/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பயணிகள் நிழற்குடை கீழே விழும் அபாயம்
/
பயணிகள் நிழற்குடை கீழே விழும் அபாயம்
ADDED : மே 24, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : பண்ருட்டி அருகே பழுதடைந்து இடிந்து விழும் நிலையிலுள்ள பயணியர் நிழற்குடையை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணியர் நிழற்குடை முற்றிலுமாக சேதமடைந்த நிலையில் உள்ளது.
மழை பெய்யும் போது நிழற்குடையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஒதுங்கி நிற்க முடியாத அவலநிலை உள்ளது.
எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, சேதமடைந்த நிழற்குடையை இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.