ADDED : அக் 03, 2024 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே வெறிநாய்கள் கடித்து மயில் இறந்தது.
பெண்ணாடம் அடுத்த செம்பேரி வெள்ளாற்றங்கரையில், நேற்று மாலை மயில்கள் கூட்டமாக இரை தேடிக்கொண்டிருந்தது.
அங்கு வந்த 2 வெறிநாய்கள் மயில்களை துரத்தியது. அப்போது ஆண் மயில் மட்டும் சிக்கியது. இதையறிந்த விவசாயிகள் நாய்களை துரத்தி, உயிருக்கு போராடிய மயிலை மீட்டனர். ஆனால் வனக்காப்பாளர் வருவதற்குள் மயில் இறந்துவிட்டது.
இறந்த மயிலை கிராம மக்கள், விருத்தாசலம் வனக் காப்பாளர் நவநீதகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.