ADDED : செப் 27, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி அருகே மின்சாரம் தாக்கி இறந்த மயிலை வனத்துறை அலுவலர்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் காப்புக்காட்டில் புதைத்தனர்.
திட்டக்குடி அடுத்த கொடிக்களம் தோப்பு காலனியில், நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு மின்சாரம் தாக்கியதில் ஒரு வயது பெண் மயில் இறந்து கிடந்தது.
கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறை அலுவலர்கள் மயிலை மீட்டு, ஆவினங்குடி கால்நடை மருந்தகத்தில் பிரேத பரிசோதனை செய்து, கார்கூடல் காப்புக்காடு பகுதியில் புதைத்தனர்.

