/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாசஞ்சர் ரயிலில் சிக்கி மயில் பலி
/
பாசஞ்சர் ரயிலில் சிக்கி மயில் பலி
ADDED : மே 30, 2025 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: பாசஞ்சர் ரயிலில் சிக்கி பலியான மயிலை, ரயில்வே போலீசார் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் பாசஞ்சர் ரயில் நேற்று காலை 7:00 மணிக்கு விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் வந்தது. அப்போது, ரயில் இன்ஜின் முன், ஆண் மயில் சிக்கி இறந்திருந்தது. அதைத் தொடர்ந்து அந்த மயிலை மீட்ட லோகோ பைலட், விருத்தாசலம் இருப்புபாதை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதைத்தொடர்ந்து, இருப்புபாதை போலீசார், விருத்தாசலம் வனத்துறை அதிகாரிகளிடம் இறந்த ஆண் மயிலை ஒப்படைத்தனர். பின், வனத்துறை அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.