ADDED : ஆக 01, 2025 03:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்: குமராட்சி அருகே காயமடைந்த மயில், வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த சிறகிழந்தநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். நேற்று காலை தனது வயலுக்கு சென்ற போது, கால் பாதிக்கப்பட்ட நிலையில் மயில் ஒன்று நடக்க முடியாமல் நின்று கொண்டிருந்தது தெரிந்தது.
காயமடைந்த மயிலை மீட்ட அவர், குமராட்சி போலீஸ் ஸ்டேஷனில், வனத்துறை அலுவலர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்.