கூழாங்கல் கடத்தியவர் கைது: சுரங்க துறை அதிகாரிகள் அதிரடி
கூழாங்கல் கடத்தியவர் கைது: சுரங்க துறை அதிகாரிகள் அதிரடி
UPDATED : செப் 07, 2026 11:24 PM
ADDED : செப் 07, 2026 10:55 PM
வேப்பூர்:மினி லாரியில் கூழாங்கல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் கனிம வளம் மற்றும் புவியியல் சுரங்கத்துறை வருவாய் ஆய்வாளர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் வேப்பூர் கூட்டுரோட்டில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த டி.என். 28 பிகே 8280 பதிவெண் கொண்ட மினி லாரியை நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனர்.
அதில், விருத்தாசலம் அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்த கதிர்வேல் மகன் அருள்தாஸ், 23; என்பதும், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இருந்து 2 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து மினிலாரியை பறிமுதல் செய்து டிரைவர் அருள்தாசுடன் சேர்த்து வேப்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து அருள்தாசை கைது செய்தனர்.
