ADDED : பிப் 01, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் கூழாங்கற்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். நடுவீரப்பு மெயின்ரோட்டில் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அரசு அனுமதியின்றி 2 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
நடுவீரப்பட்டு போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, லாரியை ஓட்டி வந்த விருத்தாசலம் நடியப்பட்டு கிராமத்தை சேர்ந்த பரமசிவம், 45; என்பவரை கைது செய்தனர்.