தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கூழாங்கற்கள் கடத்தல்

கூழாங்கற்கள் கடத்தல்

கூழாங்கற்கள் கடத்தல்


ADDED : டிச 10, 2024 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 10, 2024 06:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த பொன்னேரி புறவழிச்சாலையில், உதவி புவியிய லாளர் ஜீவா தலைமையிலான சுரங்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை செய்தனர்.

அப்போது, அவ்வழியே வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்தனர். அதில், அரசு அனுமதியின்றி 3 யூனிட் கூழாங்கற்களை கடத்திச் செல்வது தெரிந்தது.

புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us