தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கூழாங்கல் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

கூழாங்கல் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

கூழாங்கல் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : நவ 20, 2024 08:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2024 08:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே கூழாங்கல் கடத்த பயன்படுத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் ரமேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று கருவேப்பிலங்குறிச்சியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த (டிஎன்48 - ஜெ7570) என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில், அரசு அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து, டிப்பரை பறிமுதல் செய்த அதிகாரிகள், கருவேப்பிலங்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us