ADDED : செப் 14, 2025 01:33 AM

கடலுார் : கடலுார் வில்வநகர் அரசு ஊழியர் சங்க கட்டடத்தில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது.
மா வட்ட தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சுப்ரமணியன், சங்க கொடியேற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் சிகாமணி, அஞ்சலி தீர்மானம் வாசித்தார். துணைத் தலைவர் பத்மநாபன் வரவேற்றார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,850 ரூபாய் வழங்க வேண்டும். கடலுார் நகரின் மைய பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். ரோட்டரி சங்க முன்னாள் உதவி ஆளுநர் பூங்குன்றன், ஓய்வு பெற்ற உள்ளாட்சி நிதி தணிக்கை துறை இயக்குனர் ரத்தினவேல் ஆகியோ ர் மூத்த ஓய்வூதியர்களை கவுரவித்தனர்.
சுகாதாரத் துறை முன்னாள் இயக்குனர் கண்ணன், அகில இந்திய உதவி செயலாளர் மருதவாணன், டாக்டர் செல்வகுமார், மா நில செயலாளர் மனோகரன் பேசினர். வட்ட செயலாளர் ராமதாஸ் நன்றி கூறினார்.