ADDED : அக் 04, 2025 07:22 AM

விருத்தாசலம் :தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க 3வது மாவட்ட மாநாடு விருத்தாசலத்தில் நடந்தது.
மாநாட்டிற்கு, மாவட்ட தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். வட்ட தலைவர்கள் ஏசு அடியான், கணேசன், அண்ணாதுரை, பக்கிரி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் ஆதிமூலம் வரவேற்றார். மாநிலச் செயலாளர் மனோகரன் துவக்கி வைத்து பேசினார்.
மாநில செயலாளர் சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா, டாக்டர் சேதுபதி, ஸ்டேட் பாங்க் முதன்மை மேலாளர் மீனாம்பிகை, உதவி கருவூல அலுவலர் வைரக்கண்ணு உட்பட பலர் பங்கேற்றனர்.
மாநாட்டில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை, போலீஸ் மற்றும் ஊராட்சி எழுத்தர் உட்பட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,850 ரூபாய் வழங்க வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிகளை உடன் நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.