ADDED : டிச 27, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: அரசு ஓய்வூதியர் சங்கத்தின் குறிஞ்சிப்பாடி வட்டக்கிளை ஓய்வூதியர் தின விழா வடலூரில் நடந்தது.
மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். வட்டக்கிளை தலைவர் இளங்கோ வரவேற்றார். விழாவில், 70 வயது பூர்த்தியானவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது.

