/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
களையிழந்த காணும் பொங்கல் பெண்ணாடம் மக்கள் ஏமாற்றம்
/
களையிழந்த காணும் பொங்கல் பெண்ணாடம் மக்கள் ஏமாற்றம்
களையிழந்த காணும் பொங்கல் பெண்ணாடம் மக்கள் ஏமாற்றம்
களையிழந்த காணும் பொங்கல் பெண்ணாடம் மக்கள் ஏமாற்றம்
ADDED : ஜன 18, 2024 04:40 AM

பெண்ணாடம்: பெ.பொன்னேரி வெள்ளாற்றில் செடி, கொடிகள் அதிகளவில் மண்டியதால் காணும் பொங்கல் திருவிழா களையிழந்து, பெண்ணாடம் பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
காணும் பொங்கலையொட்டி, பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி வெள்ளாற்றில் பெண்ணாடம், இறையூர், திருமலை அகரம், அரியராவி, மாளிகைக்கோட்டம் மற்றும் அரியலுார் மாவட்ட கிராம மக்கள் என 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆண்டுதோறும் ஒன்றுகூடி, ஆண்களுக்கான கபடி, நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம்; பெண்களுக்கான கோ - கோ, இசை நாற்காலி, ஊசி கோர்த்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் விமர்சையாக நடக்கும். ஏராளமான பெண்கள் ஒன்று சேர்ந்து கும்மி அடித்தும், திம்பி சுற்றியும் காணும் பொங்கலை கொண்டாடுவர்.
ஆனால் வெள்ளாற்றில் போதிய நீர்வரத்தின்றி உள்ளதால் தர்ப்பை புல் அதிகளவில் வளர்ந்து மண்டியுள்ளன. இதனால் கடலுார், அரியலுார் மாவட்ட கிராம மக்கள் வெள்ளாற்றில் காணும் பொங்கல் திருவிழா கொண்டாட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.