/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் குரங்குகள் அட்டகாசத்தால் மக்கள் அச்சம்

ADDED : டிச 24, 2025 06:08 AM

சே த்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிந்து வருகின்றன.
இந்த குரங்குகள் வீடுகளில் ஜன்னல், வாசல் கதவுகள் வழியாக உள்ளே புகுந்து சமையல் அறையில் உள்ள உணவு பொருட்களை துாக்கி செல்கின்றன. தானிய மூட்டைகளை கடித்து குதறி அதில் உள்ள தானியங்களை சாலைகளுக்கு இழுத்து சென் று பாழாக்குகின்றன.
குடியிருப்புகளில் உலா வரும் குரங்குகள் பள்ளி மாணவ, மாணவிகள், சிறுவர்களை அச்சுறுத்தும் வகையில் அங்கும் இங்கும் தாவி குதிக்கின்றன.
மொட்டை மாடிகளில் வெயிலில் உளர்த்தப்படும் வேர்கடலை, மிளகாய் உள்ளிட்ட தானியங்களை பாழ் படுத்துகின்றன.
குரங்குகள் அட்டகாசத்தால் முதியவர்கள், சிறுவர்கள், மூதாட்டிகள் வீடுகளிலிருந்து வெளியே வர அஞ்சுகின்றனர்.
எனவே சம்மந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் முகாமிட்டு குரங்குகளை பிடித்து காடுகளில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.