/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
ADDED : டிச 24, 2025 06:07 AM

கடலுார்: கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
சிகரம் மாற்றுத்திறனாளிகள் மாற்றத்திற்கான சங்க சிறப்பு தலைவர் குமார் தலைமையில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சையத் முஸ்தபா, இணை ஒருங்கிணைப்பாளர்கள் முகமது ஷெரீப், ராஜசேகர், அமர்ராஜ், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
ஆர்.டி.ஓ., சுந்தரராஜன், தாசில்தார் மகேஷ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, 2018 முதல் இலவச மனைப்பட்டா வழங்க கோரிக்கை விடுத்து, கடந்த 2022ம் ஆண்டு 145 நபர்களுக்கு எம்.புதுார் அடுத்த மாவடிப்பாளையத்தில் கொடுத்த இடத்தை சமன்படுத்தி மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

