/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தாலுகா அலுவலகத்தில் மக்கள் அவதி
/
தாலுகா அலுவலகத்தில் மக்கள் அவதி
ADDED : நவ 19, 2025 08:10 AM
திட்டக்குடி : தாலுகா அலுவலகத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
திட்டக்குடி தாலுகாவில், 109 வருவாய் கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பல்வேறு சான்றுகள் பெறவும், ஆதார் திருத்தம், பொது வினியோக திட்ட பணிகள், நில அளவை உட்பட பல்வேறு தேவைகளுக்காக தினசரி தாலுகா அலுவலகம் வந்து செல்கின்றனர்.
மேலும், தாலுகா அலுவலக வளாகத்தில் சார்நிலை கருவூலம், இ - சேவை மையமும் செயல்படுகின்றன. திட்டக்குடியிலிருந்து 30 கி.மீ., தொலைவில் இருந்து பொதுமக்கள் மற்றும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் தினசரி வந்து செல்லும் நிலை உள்ளது.
தாலுகா அலுவலகத்திற்கு ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில், குடிநீர், பொது கழிவறை இல்லாமல் மக்கள் சிரமம் அடைகின்றனர். குடிநீர், கழிவறை வசதி ஏற்படுத்தி தர பொது மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
அதனால், தாலுகா அலுவலக வளாகத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

