/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடம் குறுவட்டத்தை இரண்டாக பிரிக்க கோரிக்கை
/
பெண்ணாடம் குறுவட்டத்தை இரண்டாக பிரிக்க கோரிக்கை
ADDED : நவ 19, 2025 08:10 AM
பெண்ணாடம்: பெண்ணாடம் குறுவட்டத்தை இரண்டாக பிரித்து, கூடுதல் வருவாய் ஆய்வாளரை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
திட்டக்குடி தாலுகாவில் திட்டக்குடி மேற்கு, கிழக்கு, தொழுதுார், பெண்ணாடம் ஆகிய நான்கு குறுவட்டங்கள் உள்ளன.
அதில், திட்டக்குடி கிழக்கு குறுவட்டத்தில் 25; மேற்கு குறுவட்டத்தில் 19; தொழுதுார் குறுவட்டத்தில் 21; பெண்ணாடம் குறுவட்டத்தில், 44; வருவாய் கிராமங்கள் என மொத்தம், 109 வருவாய் கிராமங்கள் உள்ளன.
இதில், மற்ற குறுவட்டங்களை விட இரண்டு மடங்கு வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பெண்ணாடம் குறுவட்டத்திலுள்ள 44 வருவாய் கிராமங்களுக்கு, ஒரு வருவாய் ஆய்வாளர் மட்டுமே உள்ளார். இதனால் மக்கள் தொகை, விவசாயம் சார்ந்த கணக்கெடுப்பு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை, கலவரம் உள்ளிட்ட அவசர காலங்களில் கிராமங்களை நிர்வகிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
அதனால், பொதுமக்கள் நலன் கருதி, பெண்ணாடம் குறுவட்டத்தை இரண்டாக பிரித்து, கூடுதல் வருவாய் ஆய்வாளரை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

