ADDED : அக் 06, 2025 01:53 AM
விருத்தாசலம்: பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் பொது கழிப்பிடம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம் நகராட்சியில் உள்ள பெரியார் நகர் வடக்கு, தெற்கு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, இந்தியன் வங்கி, தனியார் வங்கி, தீயணைப்பு அலுவலகம், வனத்துறை அலுவலகம், தனியார் பள்ளிகள், வங்கிகள், சிறுகடன் நிறு வனங்கள் உள்ளன.
மேலும், பெரியார் நகர் பஸ் நிறுத்தம் அருகே எம்.எல்.ஏ., அலுவலகம், நிலவள வங்கி, ஏ.டி.எம்., மையங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி பணிக்கு வரும் மகளிர் சுய உதவிக்குழுவினர் பொது கழிப்பிடம் இல்லாமல் மிகுந்த சிரமமடைகின்றனர்.
கிராமங்களில் இருந்து வரும் மகளிர் குழுவினர், இயற்கை உபாதையை கழிக்க முடியாமல், பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகும் அவலம் உள்ளது. இது குறித்து பல ஆண்டுகளாக முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இனியாவது பெரியார் நகரில் பஸ் நிறுத்தம் அருகே பொது கழிப்பிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.