/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் காய்ச்சல் அதிகரிப்பு; மாவட்ட அரசு மருத்துவமனைகளில் குவியும் மக்கள்
/
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் காய்ச்சல் அதிகரிப்பு; மாவட்ட அரசு மருத்துவமனைகளில் குவியும் மக்கள்
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் காய்ச்சல் அதிகரிப்பு; மாவட்ட அரசு மருத்துவமனைகளில் குவியும் மக்கள்
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் காய்ச்சல் அதிகரிப்பு; மாவட்ட அரசு மருத்துவமனைகளில் குவியும் மக்கள்
ADDED : செப் 09, 2025 06:26 AM

கடலுார் : சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக மாவட்டம் முழுவதும் வைரல் காய்ச்சல் ஏற்பட்டு பொதுமக்கள் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர்.
உலக வெப்பமயமாதல் காரணமாக சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதனால் சுனாமி, பருவம் தவறிய மழை, அதிக வெயில், அதிக மழை என எல்லாமே அளவுக்கதிகமாக ஏற்பட்டு வருகிறது.
தற்போது ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இலேசான வெயில், அவ்வப்போது மழை பெய்யும். ஆனால் தற்போது அதிகளவிலான வெயில் வாட்டி வதைக்கிறது. மாலை நேரங்களில் லேசான மழை பெய்கிறது.
இதுபோன்று உடனுக்குடன் மாற்றம் ஏற்படுவதால் பலருக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.
வெயில், மழை என, மாறி மாறி வருவதால் பொதுமக்கள் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இந்த காய்ச்சல் காரணமாக சளித்தொல்லை, தொண்டை கட்டுதல் போன்ற காரணங்களால் மக்கள் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். மாவட்ட முழுவதும் இப்பிரச்னை மேலோங்கி உள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொற்கொடி கூறுகையில், 'தற்போது பொதுமக்களுக்கு காய்ச்சல் வருவது சீதோஷ்ணநிலை மாற்றத்தால்தான். தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல், உடல்வலி போன்றவை குறையாமல் இருந்தால் உடனே அவர்கள் மருத்துவமனைகளில் ரத்தம் பரிசோதனை செய்ய வேண்டும்.
இதுபோன்ற நாட்களில் காய்ச்சிய குடிநீரை தான் பருக வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மாஸ்க் அணிந்து கொண்டால் சிறந்தது. அவர்களுக்கு குளிர்ந்த காற்று தாக்காமல் இருக்கும். மற்றவர்களுக்கும் ப ரவாது.
அரசு சார்பில் குடி நீரில் குளோரின் கலந்து வினியோகிக்கப்படுகிறது. அதிகளவு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ குழுவி னர் சென்று நடவடிக்கை மேற் கொள்வார்கள் என்றார்.