/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீபாவளி பண்டிகையையொட்டி பஸ் நிலையத்தில் குவிந்த மக்கள்
/
தீபாவளி பண்டிகையையொட்டி பஸ் நிலையத்தில் குவிந்த மக்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி பஸ் நிலையத்தில் குவிந்த மக்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி பஸ் நிலையத்தில் குவிந்த மக்கள்
ADDED : அக் 18, 2025 07:17 AM
கடலுார்: தீபாவளி பண்டிகையையொட்டி கடலுார் பஸ் நிலையத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.
தீபாவளியையொட்டி, ஜவுளி, பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வாங்க கடலுாரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடலுாரில் குவிந்தனர். பொருட்கள் வாங்க வந்திருந்த மக்கள் மற்றும் கடலுாரில் தங்கி வேலை பார்த்த அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று மாலை கடலுார் பஸ் நிலையத்தில் குவிந்தனர்.
மூன்று நாட்கள் தொடர்விடுமுறை என்பதால் நேற்று முதலே பொதுமக்கள் பஸ்நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.