/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தெரு நாய் தொல்லை அதிகரிப்பு நகர்மன்ற கூட்டத்தில் புகார்
/
தெரு நாய் தொல்லை அதிகரிப்பு நகர்மன்ற கூட்டத்தில் புகார்
தெரு நாய் தொல்லை அதிகரிப்பு நகர்மன்ற கூட்டத்தில் புகார்
தெரு நாய் தொல்லை அதிகரிப்பு நகர்மன்ற கூட்டத்தில் புகார்
ADDED : அக் 18, 2025 07:17 AM

நெல்லிக்குப்பம்: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சாய்ந்த மின்கம்பத்தை சரி செய்ய அளித்த புகாருக்கு தீர்வு காணாமலேயே தீர்வு கண்டதாக அதிகாரிகள் தகவல் கொடுத்திருப்பது தவறானது என்று, நெல்லிக்குப்பம் நகர்மன்ற கூட்டத்தில் ஆளும் கட்சி கவுன்சிலர் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லிக்குப்பம் நகரமன்ற கூட்டம் சேர்மன் ஜெயந்தி தலைமையில் நடந்தது.துணைத்தலைவர் கிரிஜா,கமிஷ்னர் கிருஷ்ணராஜன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் ஆரம்பித்த உடன், கரூர் த.வெ.க.கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேர் மற்றும் இறந்த முன்னாள் எம்.எல்.ஏ.அன்பரசன் ஆகியோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாரூக் உசேன் (சுயே): அருணாசலம் மருத்துவமனைக்கு வரிவிலக்கு அளிக்கபடுகிறது.ஆனால் ஆலை நிர்வாகம் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆலையில் மின்சாரம் தயாரிப்பதால் நகராட்சி தெருவிளக்குகளுக்கு இலவச மின்சாரம் வழங்கலாம்.
ஹேமாவதி (தி.மு.க); உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சாய்ந்த மின்கம்பத்தை சரி செய்ய அளித்த புகாருக்கு தீர்வு காணாமலேயே தீர்வு கண்டதாக அதிகாரிகள் தகவல் கொடுத்திருப்பது தவறானது.
இக்பால் (த.மு.மு.க); ஆலை நிர்வாகம் கேட்கும் குறைகளை உடனடியாக சரி செய்கிறோம்.ஆனால் நாம் கேட்பதை எதுவும் செய்வதில்லை.
புனிதவதி(அ.தி.மு.க);நகராட்சி மருத்துவமனையில் தினமும் 20 பேர் நாய்கடி பாதிப்பிற்குள்ளாகின்றனர். நகரத்தில் தெரு நாய் தொல்லை அதிகம் உள்ளது.
கவுன்சிலர்கள் கொடுக்கும் புகாருக்கு தீர்வு காண்பதில்லை.இதற்கு கமிஷனர், 'முதல் கட்டமாக 500 நாய்களுக்கு கருத்தடை செய்ய உள்ளோம் என்ற கூறினார்.
சத்தியா (தி.மு.க); 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்கியிருந்த இடத்தை தனியாருக்கு டெண்டர் விட்டது தவறு இதற்கு கமிஷனர், 'ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சட்டபடி அந்த இடத்தை வழங்காததால் தனியாருக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டது என்று பதில் கூறினார்.
மலையான் (அ.தி.மு.க); என் வார்டில் பயன்படாத குடிநீர் டேங்க் இடியும் நிலையில் உள்ளது.டேங்க் இடிந்து உயிரிழப்பு ஏற்பட்டால் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.
பன்னீர்செல்வம் (பா.ம.க); நகரம் முழுவதும் உள்ள மக்களுக்கு எங்கள் பகுதியில் இருந்து குடிநீர் வழங்குகிறோம்.எங்களுக்கு சமுதாய கூடம் கட்டி தர வேண்டும்.
இதேபோல் கவுன்சிலர்கள் பருவமழை வருவதால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.