/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீபாவளி துப்பாக்கி விற்பனை 'ஜோர்'
/
தீபாவளி துப்பாக்கி விற்பனை 'ஜோர்'
ADDED : அக் 18, 2025 07:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துப்பாக்கி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு புத்தாடைகள், பட்டாசு, இனிப்பு மற்றும் பலகார வகைகள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
சிறுவர்கள் வெடித்து மகி ழும் விதமாக, கடலுார் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் 50 ரூபாய் முதல், 250 ரூபாய் வரை பல்வேறு விதமான துப்பாக்கிகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிகளை சிறுவர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.